AGRI TIPS

தென்னை


தென்னை பயிரிடுவதற்க்கு சிறந்த மண்வளம் செம்மண்,வண்டல்மண்,மணல் கலந்த செம்மண். ஆடி மற்றும் மார்கழி மாதம் தென்னை நடவுக்கு ஏற்றவை. 3 அடி நீளம் 3 அடி அகலம் 3 அடி ஆழம் தென்னை நடவுக்கு ஏற்றவை. தென்னையின் இடைவெளி குறைந்தது 25*25 இருக்கவேண்டும். தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் சிறந்தது,தண்ணீர் ஒருநாளைக்கு 50 முதல் 110 லிட்டர் தேவைப்படும். தென்னையின் ஆயுட்காலம் 40 முதல் 80 வருடம் ஆகும். தென்னையில் வருடத்திற்க்கு 200 முதல் 250 காய்கள் பறிக்கலாம். தென்னையில் குறைந்தது 24 மட்டைகள் இருக்க வேண்டும். வருடத்திற்க்கு மூன்றுமுறை உரமிடல் வேண்டும்,நுண்ணூட்டசத்து மிக முக்கியமானவை. தென்னை ஒரு மிகச்சிறந்த வருமானமுள்ள பனப்பயிர் ஆகும்.

நெல்


விதை நெல்லை நன்கு சுத்தபடுத்த சாக்குபையில் கட்டி 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். நாற்றாங்காலில் இருந்து 15 முதல் 20 வது நாளில் நன்கு உழவு ஓட்டிய வயலில் நடவேண்டும். நெல் வயலுக்கு போதுமான அளவு தண்ணீர் விட வேண்டும். நாற்று நட்டு 15 முதல் 20 நாளில்,முதல் களை எடுத்து நன்கு உரமிட வேண்டும். நாற்று நட்டு 15 வது நாளில் இரண்டாவது களை எடுத்து நன்கு உரமிட வேண்டும். 70 முதல் 75 வது நாளில் கதிர் விட ஆரம்பிக்கும். நெல்லிற்கு இரண்டு அல்லது மூன்று முறை உரமிட வேண்டும். நெல்லின் இரகத்தை பொறுத்து 105 முதல் 110 நாட்களில் அனைத்தும் அறுவடைக்கு தயாராகும். நன்கு விளைந்த நெல் 30 முதல் 40 மூட்டை வரை நன்கு விளைச்சல் கிடைக்கும்.

கொய்யா


கொய்யா என்பது மருத்துவ குணமுள்ள ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்ககூடிய பயிர் ஆகும் கொய்யா தைவான்,லக்னோ 49,சிவப்பு ரகம் போன்ற வகைப்படும் கொய்யா பயிரின் ஆயுட்காலம் 20 முதல் 40 வருடம் ஆகும் கொய்யா ஒரு ஏக்கருக்கு 10*10 அல்லது அடா்நடவு 6*6 இடைவேளியில் நடவேண்டும் கொய்யா இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு தினமும் வருமானம் வரகூடிய பயிர் ஆகும் கொய்யாவிற்கு 3 முதல் 5 நாட்களுக்குள் தண்ணீா் இடவேண்டும்,சொட்டுநீா்பாசனம் சிறந்தது கொய்யாவிற்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று உரம் இடவேண்டும் கொய்யா வருடத்திற்கு இரண்டு முறை கவாத்து அல்லது கிளைய எடுத்து கட்டிவிடவேண்டும் கொய்யா நடவு பொறுத்து ஒரு நாளைக்கு 1 ஏக்கருக்கு 40 முதல் 50 கிலோ வரை பரிக்கலாம்

மாமரம்


நல்ல வடிகால் வசதியும் சற்றே அமிலத்தன்மையும் (PH 6-7) உள்ள எந்த மண்ணிலும் மாமரங்கள் நன்கு வளரும் . தோட்டம் அமைக்கும் போது கன்றுகள் 40-50 அடி இடைவெளியில் 90*90*90 cm (ஏக்கருக்கு சுமார் 100 மரங்கள் )நடப்படுகின்றன .முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது மா மரங்கள் பூக்கத் தொடங்கும் தருணத்தில் நீர் பாய்ச்சுவதைத் தவிர்க்க வேண்டும் .இந்தத் தருணத்தில் அதிக நீர் பாய்ச்சினால் பூக்கள் உருவாவது குறைந்து ,இலைகள் அதிக அளவில் தோன்றும் .மாமரத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தோன்றும் பூக்களை கிள்ளி அப்புறப்படுத்த வேண்டும் ,அப்போதுதான் செடி விரைவில் வளந்து மரமாகும் .மகரந்த சேர்க்கை அதிக அளவில் நடைபெற்று காய்ப்புத் திறனை அதிக படுத்த ,மாந்தோப்பில் தேனீ பெட்டிகளை வைத்து பராமரிக்கலாம் . மாங்கொட்டைக்குள் வண்டுகள் தோன்றுவதை தவிர்க்க ,மாமரத்தின் கீழ் விழக்கூடிய காய்கள் மற்றும் சருகுகளை சேமித்து எரித்து விட வேண்டும் .

வாழை


வாழை முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது .ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஒரு பருவம் ,செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ஒரு பருவம் .டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை ஒரு பருவம் என வாழைக்கு மூன்று பருவங்கள் உள்ளன .ஜூன் மாதத்தில் நடவு செய்த வாழை நல்ல வீரியத்துடன் வேகமாக வளரும் .அக்டோபர் மாதம் பயிர் செய்த வாழை மெதுவாக ஒரே சீராக வளரும் .நல்ல வடிகால் உள்ள செம்மண் உகந்தது .காரமண் மற்றும் உப்புமண் உகந்ததல்ல .இதற்கு எந்த விதமான உழவு முறையும் தேவை இல்லை .லேசாக மண்ணை பறித்து ,அதன் மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டு மண் அணைக்க வேண்டும் .நெட்டை ரகங்களுக்கு 8 அடி இடைவெளியும் ,மற்ற நாட்டு ரகங்களுக்கு 12 அடி இடைவெளியும் தேவை .வாழை விதைக்கிழங்குகளை 20 முதல் 25 cm ஆழத்தில் தான் நடவு செய்ய வேண்டும் .10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும் .மாதம் ஒரு முறை பக்கக்கன்றுகளை அகற்ற வேண்டும் .

நெல்லி


அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரக்கூடியது நெல்லி.சரளை மண் நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும் . நிலத்தை நன்றாக உழவு செய்து ,செடிக்கு செடி வரிசைக்கு வரிசை 15 அடி இடைவெளி இருப்பது போல் குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும் .ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும் .நெல்லி எல்லா வகை மண்ணிலும் நன்கு வளரும் தன்மையுடையது .வடிகால் திறனுள்ள செம்மண் மிகவும் ஏற்றது .நடவு வயலை 2 (அ ) 3 முறை ஆழமாக உழவு செய்து நிலத்தை பயன்படுத்த வேண்டும்.2 * 2 * 2 அடி நீளம் ,அகலம் ,ஆழம் உள்ள குழியை எடுத்து ஒரு வாரகாலத்திற்கு ஆறப்போட வேண்டும் .நடவு செய்யும் போதே தண்ணீர் விட்டால் குழியின் அடிப்பாகத்தில் சூடு ஏறி இளம் வேர் கருகிவிடும் எனவே நடவுக்கு இரண்டு நாள் முன்பாகவே குழிகளில் தண்ணீர் ஊற்றி நன்றாக குளிர வைக்க வேண்டும் .நெல்லிக்கன்று நன்கு வளர்ச்சி அடையும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர் பாசனம் செய்ய வேண்டும் .